கீழக்கரை: கீழக்கரை கிழக்கு நாடார் தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஏப்.25 அன்று கணபதி ஹோமத்துடன் முதல் காலயாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை 7:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தனம், கோபூஜை, பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:00 மணியளவில் கடம் புறப்பாடிற்கு பிறகு பத்திரகாளியம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மலர் அலங்காரமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3:00 மணிக்கு ஊர் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், 4:00 மணி அளவில் பூச்சொரிதல் விழாவும் நடந்தது. பத்திரகாளி அம்மன் உற்ஸவ மூர்த்தியாக எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கீழக்கரை கிழக்கு நாடார் தெரு உறவின்முறையினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.