மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொரசப்பட்டில் முத்து மாரியம்மன், கங்கை அம்மன், வரசக்தி விநாயகர், பாலமுருகன், நாகாத்தம்மன் ஆகிய கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசைப்பட்டில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு முளைப்பாரி எடுத்தல் விக்னேஸ்வர் பூஜை உள்ளிட்ட பூச்சிகள் தொடர்ந்து முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது காலை 6 மணிக்கு மேல் இரண்டாம் காலயாக சாலை பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் இடம் புறப்பட்டு முத்துமாரியம்மன், கங்கை அம்மன், வரசக்தி விநாயகர், பாலமுருகன் மற்றும் நாகாத்தம்மன் கோவிலின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர். பின்பு அனைவருக்கும் தீபாரதனை காட்டினர். பொரசப்பட்டு கிராமத்தை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.