பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
06:04
அவிநாசி:அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி ஸ்ரீ திருமுருகன் குமாரவேல் சிற்பக் கலைக்கூடத்தில் ஒன்பது அடி உயர கருப்பசாமி, கட்டேரியப்பன் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது.
இச்சிலைகள், சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே அமானி பகுதியில் உள்ள கோவிலில், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, நாமக்கல் மாவட்டத்திலிருந்து தலா, 13 டன் எடை கொண்ட இரண்டு கற்கள் எடுத்துவரப்பட்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்தபதி குமாரவேல் கூறுகையில், ஒவ்வொரு சிலையும் ஆதார பீடத்துடன் ஒன்பது அடி உயரத்தில், தலா 10 டன் எடை கொண்டது. ஆறு சிற்பிகள் மூன்று மாத காலமாக இந்த சிலைகளை வடித்துள்ளனர். இன்று சேலம் எடுத்து செல்லப்படும் சிலைகள், கோவிலில், பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகாசி மாதம் கும்பாபிேஷகம் செய்விக்கப்படுகிறது, என்றார்.