திருச்செந்தூர் அக்னிமுத்து மாடசுவாமி கோயிலில் கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2023 12:04
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அக்னிமுத்து மாடசுவாமி கோயிலில் கொடை விழா கோலாகலமாக நடந்தது.
திருச்செந்தூர் மாடவீதியில் உள்ள அக்னி முத்து மாடசுவாமி கோயிலில் கொடை விழா நேற்று துவங்கியது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு புனித மாக்காப்பு அலங்காரம், குடி அழைப்பு பூஜை நடந்தது. நேற்று 0 மணிக்கு அக்னிமுத்து மாடசுவாமிக்கு சிறப்பு யாகபூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மதியக்கொடை, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலையில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இரவு 10 மணிக்கு அக்னிமுத்து மாடசுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு சாமக்கொடையும், படைப்பு தீபாராதனையும் து. தென்மாவட்ட பூஜாரிகள் சங்க தலைவர் கார்த்திகேயன் குருக்கள், செயலாளர் சண்முகம், பொருளாளர் ராமலிங்கம் உட்பட கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலங்கிணறு சண்முக சுந்தரம், நெல்லை சுதன்சிவம், ஆழ்வார்குறிச்சி ரமேஷ் செய்திருந்தனர்.