பதிவு செய்த நாள்
29
ஏப்
2023
12:04
தாம்பரம், உலக நன்மைக்காக, ஹிந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு சார்பில், ஸ்ரீஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அருளை பெற, 48 நாள் மகா தொடர் யாகம், நேற்று துவங்கியது.
மேற்கு தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்துார், கே.வி.டி., கிரீன் சிட்டியில், நேற்று முதல் ஜூலை 16ம் தேதி வரை, 48 நாட்கள், இந்த யாகம் நடக்கிறது. முதல் நாளில் கொடியேற்றம், கிராம தேவதை ஆலய பூஜை, கலச ஸ்தாபனம், விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ பாலாம்பிகா, ஸ்ரீ ராஜ மாதங்கி பூஜைகள் நடந்தன. இந்த தொடர் யாகத்தில், 1,008 ஸ்ரீ சக்கரம் பூஜை செய்யப்பட்டு, மக்களுக்கு வழங்கப்படும். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு நிறுவன தலைவர் சந்திரகுமார், நிர்வாகிகள் பிரியா, சுகுணாதாஸ், ஜெயவீரன், கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.