காரைக்கால்: காரைக்கால் தங்கமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு புஷ்ப பல்லாக்கில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலயத்தில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடனும் விக்னேஸ்வர பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது. திருவிழாவின் 6ம் நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.வீதி உலாவின் போது நடைபெற்ற சிவன்,பார்வதி காளியாட்டம் பார்வையாளர்களை கவரும் விதமாக இருந்தது.நையாண்டி மேளம் என சொல்லப்படும் நாட்டுப்புற மேளம் வாசிக்க சிவன்.பார்வதி மற்றும் காளி,கருப்புசாமி ஆகியோர் ஆட்டம் கலை கட்டியது இதில் ஏராளமாக பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 1ம் தேதி தீமிதி திருவிழா மிகவிமர்ச்சியாக நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.