பதிவு செய்த நாள்
12
மே
2023
03:05
கீரனூர்: பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீரனூர், அழகிய சொக்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழநி, முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களில் கீரனூரில் திருமகள், நிலமகள், அழகிய சொக்கநாதர் பெருமாள் திருக்கோயில் உள்ளது. மே.10,ல் முதல் கால வேள்வி பூஜை, நன்மங்கள இசையுடன் துவங்குகிறது. அதில் குரு வணக்கம், புனித நீர் வழிபாடு, காப்பு அணிவித்தல், வேள்விச்சாலை வழிபாடு, திருக்குடங்கள் உலா, நான்மறை ஓதுதல், அமுது படைத்தல், பேரொளி வழிபாடு, மருந்து சாத்துதல், உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. நேற்று (மே.11) இரண்டாம் கால வேள்வி பூஜை, கண் திறத்தல், நிறை வேள்வி, திருக்குடங்கள் உலா நடைபெற்றது. திருமகள், நிலமகள், அழகிய சொக்கநாதர் பெருமாள் சன்னதி கோபுரத்திற்கு காலை 11:10 காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோசமிட்டனர் அதன்பின் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாராயணம் அமுது படைத்தல், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.