திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா: பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2023 05:05
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
பூமாயி அம்மன் கோவிலில் மே11ல் கொடியேற்றி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் அம்பாள் சர்வ அலங்காரத்தில் குளத்தை வலம் வருதல் நடைபெறுகிறது. இன்று ஆறாம் திருநாளை முன்னிட்டு திருப்புத்தூர் தென்மாபட்டு, தம்பிபட்டி பகுதி சோழிய வெள்ளாளர் இளைஞர்கள் குழு சார்பில் பால்குடம், பூத்தட்டு மற்றும் அன்னதான விழா நடந்தது. இன்று காலை 8:00 மணி அளவில் கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து பக்தர்கள் திரளாக பால்குடம், பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு வந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சந்தனக்காப்பு வெள்ளி கவச அலுங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு தீபராதனை நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பூத்தட்டிலிருந்து அம்மன் காலில் பூக்களை சமர்ப்பித்தனர். பூக்கள் பிரசாதமாக பெண்களுக்கு வழங்கப்பட்டது.