வீரபாண்டி சித்திரைத் திருவிழா ; நிறைவு நாளில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2023 01:05
தேனி : தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஊர்ப்பொங்கல் நிகழ்வுடன் நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்., 19ல் திருக்கம்பம் நடும் நிகழ்வுடன் துவங்கியது. பின் மே 9ல் மலர் விமானத்தில் அம்மன் திருக்கோயில் வந்தடைந்தது. அதன்பின், மே 10ல் துவங்கி திருவிழா நடந்து வந்தது. மே 12ல் தேரோட்டம் நடந்தது. லட்சணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மே 15ல் தேர் நிலைக்கு வந்தது. நேற்று காலை ஊர்ப்பொங்கல் நிகழ்வுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு திருஆவரணப் பெட்டிக்கு சிறப்பு பூஜை நடந்த நிலையில், இன்று காலை அம்பாள் மஞ்சள் நீராட்டத்துடன் ஊர் கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. எட்டு நாட்கள் நடந்த விழாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. திருவிழா நாட்களில் பகல், இரவு என 24 மணிநேரமும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். கடைசி நாளிலும் பக்தர்கள் கூட்டத்தால் வீரபாண்டி திணறியது.