காளஹஸ்தி கங்கையம்மன் கோவில் திருவிழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2023 05:05
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி பீ.பி.அக்ரஹாரம் பகுதியில் கங்கையம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை முதலே ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர் .இதற்காக கோயில் நிர்வாக கமிட்டியினர் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்தனர். பக்தர்கள் பொங்கலிட்டு ஆடு, கோழி போன்ற விலங்குகள் பலி கொடுத்தும், மண் பானைகளில் தீபம் ஏற்றி வழிபட்டதோடு பக்தர்கள் வேப்பிலை உடலில் (ஆடையாக) சுற்றிக்கொண்டு தங்களின் நேர்த்திகடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். விழாவில் காளஹஸ்தி தொகுதி தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவி பொஜ்ஜல.பிருந்தம்மா பக்தர்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆசிர்வதித்தார். மேலும் அம்மனுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டவருக்கு கங்கை அம்மனின் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேசுகையில் காளஹஸ்தியில் நடைபெறும் இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது, பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசித்தால் தங்கள் விருப்பங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் என்று கூறுகின்றனர். இந்நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி நகர தலைவர் விஜய்குமார், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், புஜ்ஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.