பெருமாளின் அடியார்களை பன்னிரு ஆழ்வார்கள் என்பர். அவர்களுள், துாத்துக்குடி ஆழ்வார்திருநகரியில் பிறந்த நம்மாழ்வார் என்பவர் பெருமாளின் மீது பாடிய பாடல்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இவை யாவும் நான்கு வேதத்தின் சாரங்களை உள்ளடக்கியது. இதில் பெருமாள்,அவரை அடையும் வழி ,மனிதர்களுடைய நிலை, வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், அதனை போக்கும் வழிகள், போன்ற அருளுரைகளில் இவருடைய பாடல்களில் காணலாம். இவருக்கு சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வேதம் தமிழ் செய்த மாறன் என்பது இவருடைய சிறப்பு பெயர்கள். கீழ்கண்ட பெயர்களும் இவருக்குரியது தான்.
* குருகைப்பிரான் * நாவலன் பெருமாள் * ஞான தேசிகன் * பாவலர் தம்பிரான் * தொண்டர் பிரான் * குருகூர் நம்பி * திருவாய்மொழி பெருமாள் * குமரி துறைவன் * குழந்தை முனி * ஸ்ரீவைணவக் குலபதி