பத்ரகாளியம்மன் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 04:05
காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் மஹோத்ஸ்வப்பூஜையை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாகுடி பகுதியில் உள்ள ஸ்ரீமல்லிகேஸ்வரி மாரியம்மன், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் மஹோத்ஸவப் பூஜையை முன்னிட்டு கடந்த 9ம் தேதி ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு பூச்சொறிதல், காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலை இணையாக காவடி எடுத்தல்,கும்பபூஜை,அக்னி கப்பறை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை 24ம் தேதி காளியம்மன் வீதியுலா.30ம் தேதி விடையாற்றி உற்சவம் தடைபெறுகிறது விழாக்கான ஏற்பாடுகளை தலைவர்,விழா கமிட்டி மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.