சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் சிறுவாபுரி. இங்குள்ள வள்ளி கல்யாண சுந்தரர் திருக்கோலம் விசேஷமானதாகும். வள்ளியும், முருகனும் மணக்கோலத்தில் அமைந்துள்ள இவ்விக்ரகம் வேறெந்த கோயிலிலும் காண முடியாததாகும். பெண்மையின் மென்மையை உணர்த்தும் விதத்தில் வள்ளிநாயகி நாணம் கொண்டும், மணமகனுக்குரிய கம்பீரத்தோடு முருகப்பெருமானும் காண்பவர் உள்ளத்தை கவரும் விதத்தில் காட்சி தருகின்றனர். இவரை வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். இக்கோயிலில் மூலவரும் பிரம்மசாஸ்தா வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இவரை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் 4 பாடல்களில் போற்றியுள்ளார். அடியார்களின் சிந்தையில் குடிகொண்டிருக்கும் முருகன் சிறுவாபுரியில் இருக்கிறார் என்பதை “அடியார்கள் சிந்தையது குடியான தண் சிறுவை தனில் மேவு பெருமாளே” என்று போற்றிப் பாடியுள்ளார்.