திருப்புல்லாணி, திருப்புல்லாணியில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் 51 ஆம் ஆண்டு வைகாசி விசாக விழா நடந்து வருகிறது. கடந்த மே 24 புதன்கிழமை அன்று காலையில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் காலை 10:30 முதல் 12:00 மணி வரையிலும் மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலும் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. ஜூன் 2 வைகாசி விசாகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், மறுநாள் இரவு 7:00 மணியளவில் சுவாமி மயில் வாகனத்தில் வீதி உலாவும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் திருப்புல்லாணி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.