மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழா மே 24 கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலுாருக்கு எழுந்தருளினார். மேலூர் மற்றும் வழி நெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து சுவாமியை வரவேற்றனர். மேலுார் நுழை வாயிலில் தாசில்தார் செந்தாமரைக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. பகல் முழுவதும் மேலூரில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த திருமறைநாதர் இன்று மே 29 அதிகாலை மேலூரில் இருந்து மீண்டும் திருவாதவூர் கோயிலுக்கு புறப்படுகிறார். மே 31 ல் திருக்கல்யாணமும், ஜூன் 1 ல் தோரோட்டமும், ஜூன் 2 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.