மாவூற்று வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2023 11:05
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பின் 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது. தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பழமையான இக்கோயில் வளாகத்தில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீர் தனி சிறப்பு. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 10ல் முடிந்தது. கும்பாபிஷேகத்திற்கு பின் தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்தது. மண்டல பூஜையின் நிறைவு நாளில் கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து தீர்த்தவாரி குடங்கள், 108 சங்குகள் வைத்து பூஜைகள் செய்தனர். மாவூற்று வேலைப்பருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து வழிபட்டனர். ஸ்ரீ மாயா பாண்டீஸ்வரன் தலைமையில் திருக்கயிலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நதியா தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.