பதிவு செய்த நாள்
29
மே
2023
02:05
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலை அம்மன் சன்னதி முன், தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி பூஜை இன்று நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் கடந்த, 4ம் தேதி தொடங்கியது. அன்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம் நடந்து வருகிறது. இன்று அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி, அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடக்கிறது. இதற்காக சிறப்பு ஹோமங்கள் மற்றும் நான்கு கால, 1,008 கலச பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று, இரண்டு மற்றும் மூன்றாம் கால, 1,008 கலச பூஜை, ஹோமம், உமா மகேஸ்வர பூஜை நடந்தது. இன்று நான்காம் கால பூஜை, சிறப்பு ஹோமம், தம்பதி பூஜை நடைபெற்றது. பின் மூலவருக்கு, 1,008 கலசாபிஷேகம் மற்றும் அம்பாளுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.