மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2023 10:05
அவிநாசி: அவிநாசி வட்டம்,கருமாபாளையம் கிராமம் செம்பாகவுண்டன் பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி அடுத்த கருமபாளையம் கிராமம்,செம்பா கவுண்டன்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, வருகின்ற 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது. அதனை முன்னிட்டு நேற்று அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்,தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து கணபதி,நவக்ரஹ ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இன்று புண்யாகவாசனம், அங்குரார்பணம்,கலாகர்சஷணம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெறுகின்றது. மேலும்,நாளை 31ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகளும், வருகின்ற 1ம் தேதிஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட பரிபார தெய்வங்களுக்கு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.