கோபால்பட்டி, நத்தம் அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலையிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடினர். அதனைத் தொடர்ந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர்,சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. நேற்று இந்த விசாகத்தையொட்டி 4 கால பூஜைகள் நடந்தது.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.