மாம்பழத்தை சுவைத்த குரங்கிற்கு ஒரு ஆசை வந்தது. இந்த மாங்கொட்டையை புதைத்து வைத்து மரமாக்கினால் நிறைய மாம்பழங்களை சாப்பிடலாமே என நினைத்தது. அதன்படியே தினமும் புதைத்த கொட்டையை எடுத்து துளிர் விட்டுள்ளதா என பார்த்து விட்டு மீண்டும் மண்ணில் புதைத்தது. இப்படி செய்வதால் மாங்கொட்டை துளிர்விடுமா என்ன குரங்கின் ஆசை நியாயம் தான். அதனுடைய அவசரம் தான் நியாயமற்றது. எந்த செயலும் நிறைவேற காலநேரம் அவசியம். இதை உணர்ந்தவர்கள் முன்னேறுகிறார்கள்.