பதிவு செய்த நாள்
06
ஜூன்
2023
12:06
தென்தாமரைகுளம்; சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா 11-வது நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ப ஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் துவங்கியது. மேளதாளங்கள் முழங்க சந்தன குடம் , முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவிஉடை அணிந்த அய்யாவழி பக்தர்கள், அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். குரு பால. ஜனாதிபதிதலைமை வகித்தார்.குருமார்கள் பாலலோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள்ஜனா . யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். தேருக்கு முன்பாக சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் எம்.பி.,விஜய்வசந்த், கிழக்கு மாவட்ட காங்., த லைவர் கே.டி. உதயம், மாநில செய லாளர் வக்கீல் ஸ்ரீ னிவாசன், வட்டார தலைவர் முருகேசன் உட்பட பலர் அய்யாவழி பக்தர்களுடன் இணைந்து தலைப்பாகை அணிந்து தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது. விழாவை முன்னிட்டு சிறப்புபஸ்கள் இயக்க ப்பட்டன. டி.எஸ்.பி.,ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இன்று காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.