பதிவு செய்த நாள்
06
ஜூன்
2023
06:06
அம்பத்துார், அம்பத்துாரில், ஸ்ரீ யோக மாயா புவனேஸ்வரி அம்மனுக்கும், வாராஹி அம்மனுக்கும், 3,000 கிலோ மலர்களால், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அம்பத்துார், ஸ்ரீ யோக மாயா புவனேஸ்வரி பீடத்தில், வைகாசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஜெகத்குரு பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள், 3,000 கிலோ முல்லை மற்றும் மல்லிகை மலர்களால், ஸ்ரீ யோக மாயா புவனேஸ்வரி அம்மனுக்கும், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கும் புஷ்ப அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். கோடை வெப்பம் தணிந்து மழை பெய்யவும், விவசாயிகளும் பொதுமக்களும் நலமுடன் மகிழ்ச்சி அடைந்து சுபிட்சமாக வாழவும், இந்த வழிபாடு நடத்தப்பட்டது.