ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 10:45 மணிக்கு மேல் 11:45 மணிக்குள் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீப ஆராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் மூன்றாம் காலயாகசாலை பூஜைகளும், இரவில் பூர்ணாகுதி தீப ஆராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து விழாவின் தொடர்ச்சியாக இன்று ( ஜுன் 7) காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்று, நாளை காலை ஆறாம்கால யாக சாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.