காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சியில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சியில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் உள்ளது இக்கோவில் திருப்பணியை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னின்று செய்தனர் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது அதனையடுத்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 5ம் தேதி அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் காலை யாக பூஜை. இரண்டாம் கால பூஜை ஹோமங்கள், மகா பூர்ணாகுதி நடந்தது மூன்றாம் காலை யாக பூஜை. ஆடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று 4 ம் கால யாக பூஜை. நாடிசந்தானம் கோ பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜையில் இருந்து புனித நீரை தலையில் சுமந்தபடி சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கலசத்தின் மேல் நீரை தெளித்து மகா கும்பாபிஷேகம் செய்தனர் அதைத் தொடர்ந்து மகா தீபாதனையும் அன்னதானமும் வழங்கப்பட்டது விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ. பாண்டியன் ஒன்றிய குழு தலைவர் பூங்குழலி பாண்டியன் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் மற்றும் ஆலய விழா குழு கமிட்டி உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சுந்தரமூர்த்தி சபதி கண்ணன் ரமேஷ் மற்றும் தமிழ் மைந்தர்கள் இயக்கத்தின் இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் குமராட்சி பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் பலர் செய்திருந்தனர்.