பதிவு செய்த நாள்
08
ஜூன்
2023
05:06
கமுதி: கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் முத்தாலம்மன், பரிவார தெய்வங்களுக்கு கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி லெட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி,கும்ப அலங்காரம் முதல் யாகசாலை பூஜை,தீபாரதனை நடந்தது. பின்பு விக்னேஸ்வர பூஜை,புண்யாகவாசனம்,சோமபூஜை, கோ பூஜை,இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம் புறப்பாட்டுக்கு பிறகு குருக்கள் பாலாஜிபட்டர் சிவாச்சாரியார் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. முத்தாலம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் கமுதி அதனை சுற்றியள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.