கோயிலில் நந்தியை வழிபட்டு அவரது அனுமதியை பெற்ற பின்னரே சிவனைத் தரிசிக்க வேண்டும் என்பது விதி. நந்தி என்பது தர்மத்தின் அடையாளம். அதாவது சிவனைத் தாங்குவது தர்மம். கடவுளின் அருகில் இருக்கும் தகுதி தர்மத்திற்கு மட்டுமே உண்டு என்பதால் நந்தி எப்போதும் கருவறையை நோக்கிய நிலையில் இருக்கும். நந்திக்கும், சிவனுக்கும் குறுக்கே சென்றால் தர்மத்தை மீறுவதாக ஆகி விடும். எனவே பக்தர்கள் நந்திக்கு குறுக்கே போகக் கூடாது.