இதை செய்தால் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவம் கூட விலகி விடும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 04:06
தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் “தீபமங்கள ஜோதீ நமோநம” என திருப்புகழில் போற்றுகிறார். வேதாரண்யம் மறைநாதசுவாமி கோயிலில் ஒருநாள் எலி ஒன்று விளக்கிலுள்ள நெய்யைக் குடிக்க வந்தது. அப்போது தவறுதலாக அதன் கால்கள் பட்டு அணைய இருந்த தீபம் பிரகாசமாக எரிந்தது. அதன் பயனாக மறுபிறவியில் அந்த எலி பலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. முற்பிறவியில் அறியாமல் செய்த பாவம் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், அதை தரிசிப்பதாலும் விலகி விடும்.