Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் ... அலங்காநல்லூரில் அமாவாசை சிறப்பு வழிபாடு அலங்காநல்லூரில் அமாவாசை சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2023
04:06

சிதம்பரம்:  பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் காலை 8.25 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நாளை 18-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 19-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 20-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 21-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 22-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 23-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 24-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தேர் மற்றும் தரிசன விழா 25 -ம் தேதி ஞாயிற்றுகிழமை, தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அடுத்த நாள் 26-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது, பின்னர் காலை 10 மணிக்கு சித்ரசபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்பு, பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூன் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது, உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் க.சி.சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar