காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன கோயில் ஆனித் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயில் ஆனித்திருவிழா கடந்த ஜூன் 16ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, கரும்புத் தொட்டில் எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் பால்குட திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.