உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் ஆனி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவில் காலை 6:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 8:00 மணிக்கு கால சந்தி பூஜை நடந்தது. மதியம் 2:00மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5:30மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரம் கோவில் வளாகத்தை சுற்றி ரதவீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.