பதிவு செய்த நாள்
16
ஜூலை
2023
12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சனி மஹா பிரதோஷ பூஜையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சனி மஹா பிரதோஷ பூஜை நடந்தது. கோவில் கொடிமரத்தின் அருகிகே உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, ஆகியவற்றிற்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடந்த பூஜையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் ராஜகோபுரம் முன் நீண்ட வரிசையில் காத்திருந்த சுவாமி தரிசனம் செய்தனர்.