பதிவு செய்த நாள்
17
ஜூலை
2023
05:07
அன்னூர்; அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அமாவாசை வழிபாடு நேற்று நடந்தது.
அன்னூர், ஓதிமலை ரோட்டில் உள்ள பழமையான பெரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று மதியம், பால், தேன், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அதே வளாகத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த குலதெய்வத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதி, பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன், மூக்கனூர் சவுடேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.