பதிவு செய்த நாள்
21
ஜூலை
2023
12:07
கம்பம்; ஆடி வெள்ளியை முன்னிட்டு கம்பம் பகுதி கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்தல், கூழ் காய்ச்சுதல் போன்ற நேர்த்தி கடன்கள் நிறைவேற்றப்பட்டது. ஆடி மாதம் ஆடித் தபசு, ஆடிபூரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோயில்களில் நடைபெறும். ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமை என்பதால், கம்பம் கவுமாரியம்மன், சாமாண்டி அம்மன், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர், சின்னமனூர் சிவகாமியம்மன், துர்க்கை அம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பெண்களின் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது . அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்தல், கூழ் காய்ச்சி ஊற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதேபோல் திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயில், உடுமலை மாரியம்மன், மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.