பதிவு செய்த நாள்
25
ஜூலை
2023
05:07
ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருக்கு வடபத்ரசாயி என்பது திருநாமம். ‘ஆலிலையில் துயில்பவர்’ என்பது பொருள். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் உள்ளனர். பெருமாளைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் சுதை வேலைபாட்டுடன் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. கருடன், சேனை முதலியார், சூரியன், தும்புரு, நாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மா, சனகர், கந்தர்வர், சந்திரன், மது, கைடபர், பிருகு மகரிஷி, மார்க்கண்டடேயர் ஆகியோரும் உள்ளனர். விமானத்தைச் சுற்ற பிரகாரமும் உள்ளது. இங்குள்ள திட்டி வாசல்கள்(ஜன்னல் போல) வழியாக பெருமாளின் திருமுடி, திருவடியை தரிசிக்கலாம்.