ஆடிச்செவ்வாய்; முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம், முளைப்பாரி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2023 05:07
திருப்புத்தூர்: திருப்புத்தூர் புதுப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிச்செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை ஆடிதிருவிழா நடத்தப்படும். முதல் செவ்வாய் காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பக்தர்கள் விரதத்தை துவக்கினர். தினசரி இரவு அம்மனுக்கு கும்மி கொட்டி வழிபாடு நடத்தினர். இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, பூத்தட்டு, தீச்சட்டிகளை சுமந்து ஊர்வலமாக ஊர்காவலன் கோயில், சீனி விநாயகர், அகத்தீசுவரர் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி முத்துமாரியம்மன் கோயில் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் வாசலில் பக்தர்கள் கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். நாளை காலை 8 மணியளவில் மதுக்குடம் சீனி நாயர் ஆலயத்தில் எதிரே உள்ள திருக்குளத்தில் கரைக்கப்படுகிறது.