கட்டிக்குளம் சித்தர் மாயாண்டி சாமி கோயிலில் அவதார தின விழா; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 05:07
மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் உள்ள மாயாண்டி சுவாமிகளின் அவதார தினவிழா நிகழ்ச்சியில் கட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் சித்தர் மாயாண்டி சுவாமிகள் அவதரித்து பல அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளதாக கட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மக்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டு அவரைவழிபட்டு வருகின்றனர். மாயாண்டிசுவாமி தங்கியிருந்த பட்டமான் என்ற இடத்தில் அவருக்கு அவரது சீடர்கள் கோயில் கட்டி தினமும் பூஜைகள் செய்து வருவதுடன் தினமும் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.இந்தாண்டு சித்தர் மாயாண்டிசுவாமியின் அவதார தினமான இன்று பட்டமான் கோவில் மற்றும் மாயாண்டி சுவாமி கோயிலில் அதிகாலை சுவாமிக்கு பால் பன்னீர் இளநீர் மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலை பூஜைகளை நடத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த புனித நீரால் சித்தர் மாயாண்டிசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மானாமதுரை, கட்டிக்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.