கண் திறந்த காளஹஸ்தி காசி விஸ்வநாதர்..! பக்தர்கள் பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2023 05:08
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தியில் த்ரிநேத்ரர் தன் கண்களைத் திறந்தார் என்ற தகவலால், மகாதேவனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், சம்போ சங்கரா என்ற பக்தர்கள் முழக்கமிட்டபடி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ETC மையத்தில் காளஹஸ்தி மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. இதனை அன்னபூர்ணா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிவன் கோயிலில் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் செய்து கொண்டிருந்த கங்கையா திங்கட்கிழமை அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்து அலங்கரித்து விட்டு பகல் வீட்டிற்குச் சென்று மீண்டும் மாலை கோயிலுக்கு திரும்பியவர் சுவாமி கண் திறந்ததை கவனித்தார். இது குறித்து அப்பகுதியினருக்கு தெரிய வந்ததால் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய உள்ளூர் மக்களுடன் பக்தர்கள் வந்தபோது சிவபெருமான் கண்கள் திறந்ததைக் கண்ட சிறிது நேரத்தில் இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் சிவன் கோவிலுக்கு வந்து சர்வேஸ்வரரை வழிபட்டனர். ஸ்ரீகாளஹஸ்தி டூ டவுன் போலீசார் வந்து பக்தர்களை கட்டுப்படுத்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய உதவினர்.பக்தர்கள் கோவிலுக்கு வந்ததோடு மாவு விளக்குகளை ஏற்றி தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு சிவன் கோயிலுக்கு வந்து சிவபெருமானை தரிசித்தார். இதுகுறித்து அஞ்சூரு. சீனிவாசலு கூறுகையில் சிவபெருமான் கண்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் எந்த வித குறை இன்றியும், இப்பகுதி பசுமையாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதோடு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.