திருப்புத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2023 01:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நான்கு ரோடு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிவிழாவை முன்னிட்டு பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி வளர்த்து சீதளிகுளத்தில் கரைத்தனர்.
நான்கு ரோடு சந்திப்பில் உள்ள இக்கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 25 ல் காப்புக்கட்டி விரதம் துவக்கினர். தொடர்ந்து இசை வேளாளர்கள் உறவின்முறையார் மடத்தில் பாரி வளர்க்கப்பட்டது. தினசரிஇரவு பெண்கள் கரகம் எடுத்து சாம்பாண் ஊரணி தீர்த்தம் எடுத்து அம்மன் கோயிலில் பிரார்த்தித்து பின்னர் பாரிக்கு தீர்த்தம் தெளிவிப்பர். ஏழாவது நாள் தங்கும் நாளாகும். எட்டாம் நாள் தீர்த்தம் தெளிப்பும் தொடர்ந்து பாரி கோயிலுக்கு கொண்டு வருதலும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை பெண்கள் கோயிலிலிருந்து பாரி எடுத்து நகரின் முக்கிய அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் சீதளிதெப்பக்குளத்தில் பாரியைக் கரைத்து அம்மனை பிரார்த்தித்தனர். திருப்புத்தூர் மேலத்தெரு காளியம்மன்,மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கோட்டைக்கருப்பர் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு அபிேஷக,ஆராதனைகள் நடந்தன. ஏற்பாட்டினை போஸ்டாபீஸ் தெரு விழாக்குழுவினர் செய்தனர்.