பதிவு செய்த நாள்
15
ஆக
2023
06:08
ராமேஸ்வரம்: சுதந்திர தின விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடந்த பொது விருந்தில், அரசியல் கட்சியினர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
77வது சுதந்திர தின விழா யொட்டி ராமேஸ்வரம் திருக்கோயிலில் பொது விருந்து நடந்தது. இதில் ஏழை, பணக்காரர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்று கோயில் வளாகத்தில் மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று அ.தி.மு.க., தி.மு.க., தவிர இதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருவர் கூட பொது விருந்தில் பங்கேற்கவில்லை. காரணம், கோயிலில் பக்தர்கள் உரிமையை பறித்து, பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல், ஆகம விதியை மீறும் கோயில் இணை ஆணையர் மாரியப்பனை, இடமாற்ற கோரி தி.மு.க., தவிர கூட்டணி கட்சியினர் மற்றும் மக்கள் நல பாதுகாப்பு பேரவை சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக ஆக.,1ல் மாரியப்பன், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மாற்றப்பட்டார். ஆனால் 15 நாள்கள் ஆகியும் இதுநாள் வரை மாரியப்பனை மாற்றம் செய்யாததை கண்டித்து, பொது விருந்தில் அரசியல் கட்சியினர், ஹிந்து அமைப்பினர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.