பதிவு செய்த நாள்
15
ஆக
2023
06:08
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் திங்கட்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர் அதில் கடந்த 14 நாட்களில் பணமாக1,17,43,393 ரூபாய், தங்கம் 37.கிராம், வெள்ளி 2 கிலோ 75 கிராம், வெளிநாட்டு பணம் யு.எஸ்.ஏ - 359. டாலர்கள், இங்கிலாந்து - 215.பவுண்டுகள், மலேசியா - 20. ரிங்கிட்ஸ், U.A.E - 210. திர்ஹாம்கள், யூரோ - 160. யூரோ, வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீ மோகன் ரெட்டி தேவஸ்தான செயல் அலுவலர் ஸ்ரீ வெங்கடேசு தெரிவித்தனர். இந்த உண்டியல் பணம் கணக்கிடும் போது தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரிகள் எஸ்.வி. கிருஷ்ணா ரெட்டி, ரவீந்திர பாபு, வித்யாசாகர் ரெட்டி, மற்றும் கோயில் அதிகாரிகள் ஹரி மாதவ் ரெட்டி, ஹேமா மாலினி, மேற்பார்வையாளர்கள் ரவி, ரங்கசாமி, தேவஸ்தான ஊழியர்கள், சேவகர்கள், யூனியன் வங்கி கனிப்பாக்கம் கிளை உட்பட தேவஸ்தான ஊழியர்கள் பங்கேற்றனர்.