Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : ஆவணி ராசி பலன் மகரம் : ஆவணி ராசி பலன் மகரம் : ஆவணி ராசி பலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
தனுசு : ஆவணி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு : ஆவணி ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
12:08

மூலம்: சொந்த முயற்சியாலும், மனத் துணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் உங்களுக்கு இந்த மாதம் எடுத்த காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். ராசிநாதன் குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். மனதடுமாற்றம் நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. காரியங்களில் இருந்து வந்த தொய்வு நீங்கும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள்  பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணி இட மாற்றம் கிடைக்கும்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும்.  சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.   கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.  மாணவர்களுக்கு  கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
சந்திராஷ்டமம்: செப் 10, 11
அதிர்ஷ்ட நாள்: செப் 3, 4

பூராடம்:
இனிய சுபாவமும், மென்மையான பேச்சும்  உடைய உங்களுக்கு இந்த மாதம் பொன்பொருள் சேர்க்கை வரும். அதே வேளையில் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நக்ஷத்ரநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.  எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல் துறையினருக்கு கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள். மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்:  அம்மனுக்கு மல்லிகை மலர் கொடுத்து வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.
சந்திராஷ்டமம்: செப் 11, 12
அதிர்ஷ்ட நாள்: செப் 4, 5

உத்திராடம் 1ம் பாதம்:
காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். எல்லாவற்றிலும் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வழக்குகளில் இருந்து வந்த தாமதம் நீங்கும். உற்சாகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். தைரிய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரவு திருப்தி தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த பதவி உயர்வு வந்து சேரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வரத்து இருக்கும்.  எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை அர்ப்பணித்து வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
சந்திராஷ்டமம்: செப் 12
அதிர்ஷ்ட நாள்: செப் 05, 06

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar