மேட்டுப்பாளையம் கொங்காலம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2023 11:08
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள கொங்காலம்மன் கோவிலில், ஆடி அமாவாசை விழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், மோத்தேபாளையத்தில் பிரசித்தி பெற்ற கொங்காலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் நடை திறந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு மஞ்சள் மற்றும் பூக்களால் அம்மன், சுவாமிக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.