பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2023 04:08
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குட விழா நடந்தது.
இக்கோயிலில் ஆக., 9 காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு அம்மன் சந்தன காப்பு, காமாட்சி, மீனாட்சி, குமரி அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி, சிவ பூஜை மற்றும் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அலங்காரங்களில் அருள் பாலித்தார். இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து பக்தர்கள் வைகை ஆற்றிற்கு சென்றனர். அங்கு பால்குடங்கள் கட்டப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். தொடர்ந்து காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள் பாலித்து, சிறப்பு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நடராஜன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.