Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமுறை ... பாண்டூர் ஆதி வைத்தியநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் பாண்டூர் ஆதி வைத்தியநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டனூரில் 200 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
கட்டனூரில் 200 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

20 ஆக
2023
11:08

நரிக்குடி: நரிக்குடி கட்டனூரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் செல்ல பாண்டியன், ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆய்வு மேற்கொண்ட போது, இந்த பழமையான நடுகல்லை தெப்பக்குளத்திற்குள் கண்டறிந்தனர்.

அவர்கள் கூறியதாவது: நடுகல் எடுக்கும் மரபு நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே பின்பற்றி வருகின்றனர். போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைபவர்களின் தியாகத்தை போற்றி நடுகல் எடுத்து வழிபடுவர். அந்த வகையில் இங்கு கண்டறிந்த நடுகல் 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். அதில் வீரன் ஒருவன் தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டையுடன், நீண்ட காதுகள், மார்பில் ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் இடைக்கச்சை, குறுவாள் சொருகியபடி நின்று வணங்கிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் மேல் கிடைமட்டமாக 14 வரிகள், மேலிருந்து கீழாக 2 வரிகள் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொருள் அறிவதில் சிரமம் உள்ளது. ஆயினும் சில வரிகள் வாசிக்கும்படி உள்ளது. அவற்றில் வெகு தானிய (பகுதானிய) ஆண்டு. அதாவது தமிழ் ஆண்டுகள் அறுபதில் 12 வது ஆண்டாக வரும். மேலும் ஆனி மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லிற்கு சேதம் விளைவிப்பவருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இவ்வீரன் ஊரின் நன்மை பயக்கும் செயலில் ஈடுபட்டு இறந்திருக்க வேண்டும். அவரின் தியாகத்தை போற்ற நடுகல்லை நிறுவி இருக்க வேண்டும். இந்நடுகல்லை தற்போது சீர்காழியை சேர்ந்தவர்கள், உள்ளூர் பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நடுகல 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதலாம். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் ராஜகோபுரம் சேதமடைந்ததை அடுத்து கோயிலில் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று இலகு ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று காந்திமதி அம்மன் தவழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பூர், காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுப்புதுார் பரமசிவன் கோவிலில் உள்ள மந்திரகிரி ... மேலும்
 
temple news
அன்னூர்; 150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் திருப்பணி வேகமாக நடைபெறுகிறது. அன்னூர் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar