ஓணம் பண்டிகை: பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் பிரம்மாண்ட அத்த பூக்கோலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2023 10:08
பாலக்காடு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கு நாதர் கோவில் முன் போட்ட பிரமாண்ட அத்தப்பூக்கோலம் அனைவரையும் கவர்ந்தது.
கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் ஆக., 28, 29, 30 தேதிகளில் கொண்டாடப்படுகின்றன. பண்டிகையை முன்னிட்டு அத்தம் நாளான நேற்று முதல் 10 நாள் மக்கள் பூ கோலம் போடுவது வழக்கம். இந்த நிலையில் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற வடக்கு நாதர் கோவில் தெற்கு கோபுர நடை முன் மாலை கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் தயாரித்துள்ளன. இது ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். அமைப்பின் தலைமையிலான 200க்கும் மேற்பட்டோர் சேர்ந்து 60 அடி விட்டத்தில் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் தயாரித்துள்ளனர். செண்டு மல்லி, வாடா மல்லி, சாமந்தி ஆகிய பூக்கள் பூக்கோலதிற்கு மேலும் வண்ண பொலிவூட்டின. செல்பி எடுக்கவும், பூக்கோலத்தை கண்டு மகிழவும் காலை முதல் மக்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த அமைப்பு கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த அத்தப்பூக்கோலத்தை தயாரித்து வருகின்றன. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியை உயர் கல்வித் துறை அமைச்சர் பிந்து துவக்கி வைத்தார். ராதாகிருஷ்ணன் தலைமையில் ஓண பாடல்களுடன் மாஜி மேயர் அஜிதா விஜயனின் தலைமையிலான சுமார் 50 பெண்கள் கலந்து கொண்ட திருவாதிரை நடனம் இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு நிகழ்ச்சியில் அரங்கேறின.