சுட்டெரிக்கும் வெயில் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2023 03:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தரை விரிப்பான் இல்லாததால் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். புனித நீராடிய பக்தர்கள் கோயில் தெற்கு கோபுர வாசல் வழியாக வெளியேறுவர். இதில் கோயில் 3ம் பிரகாரம் முதல் தெற்கு கோபுர வாசல் வரை 100 மீட்டர் தூர இடைவெளி திறந்த வெளியில் உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் புனித நீராடி வெளியேறும் பக்தர்களுக்கு தெற்கு கோபுர வாசல் வரை தரை விரிப்பான் இன்றி, ஓடோடி சென்று அவதிபடுகின்றனர். இதில் வயது மூத்த பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே திறந்த வெளியில் உள்ள பகுதியில் தரை விரிப்பான் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.