புளியடி கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2023 03:08
அவிநாசி: அவிநாசி காசி கவுண்டன்புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள புதியடி கருப்பராயன் கன்னிமார் கோவிலில், முனியப்பன் சுவாமி மற்றும் குதிரை வாகனத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், காசி கவுண்டன் புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள புளியடி கருப்பராயன் கன்னிமார் கோவிலில் புதியதாக அமைக்கப்பட்ட முனியப்பன் சுவாமி மற்றும் குதிரை வாகனத்திற்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன் பின்னர் திருவிளக்கு ஏற்றுதல், புனித நீர் வழிபாடு, ஆனந்த மலர் வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளுடன் முதல் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜையில் திருமுறை பாராயணம், திரவியாகுதி, திருமஞ்சன வழிபாடு நிகழ்ச்சிகளுடன் செல்வ விநாயகர் புளியடி கருப்பராயன், கன்னிமார், முனியப்பன் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காசி கவுண்டன் புதூர் மற்றும் கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.