நாகர்கோவில்: நாகர்கோவில், கோட்டார் ஏழகரம் பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோவிலில் கடந்த 20ம் தேதி ஆவணி பெருந்திருவிழா துவங்கியது. விழா 29ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 5ம் நாள் திருவிழாவான நேற்று காலை சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளல், மாலை யானை ஸ்ரீபலி, பக்தி இன்னிசை, அலங்கார தீபாராதனை, இரவு சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. 6ம் நாளான இன்று (25ம் தேதி) காலை 7மணிக்கு சுவாமி எழுந்தருளல், மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, 6 மணிக்கு திருவிளக்கு பூஜை வழிபாடு, 6.30க்கு அலங்கார தீபாராதனை, இரவு 8.30க்கு சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.