சுமங்கலி பாக்கியம் நிலைக்க விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2023 12:08
சிவகங்கை; சிவகங்கை விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சுமங்கலி பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் வழங்கிய தாம்பூலம் அம்பாளிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோவிலில் குபேர மகாலட்சுமி அம்மன், வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.