திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வரலெட்சுமி பூஜையை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஞாயிறு தோறும் காலை 9:00 மணிக்கு தாயாருக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனைகள் நடைபெறுகிறது. நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் தாயாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு மகா சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு வரலெட்சுமி விரத திருமாங்கல்ய விளக்குபூஜை நடைபெற்றது. வெங்கடேசபட்டாச்சார்யர் தாயாருக்கு பூஜைகள் நடத்தினார். கோயில் வளாகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். விளக்கின் 5 முகங்களிலும் தீபம் ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள்,விழாக்குழுவினர், தாமரைக்குழுவினர் செய்கின்றனர்.